எல்டிடிஈ அமைப்பைக் காரணம் காட்டி சிங்கள மக்களைத் திசை திருப்பலாம்!

இலங்கை அரசு மீது எம்.பி செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
எல்டிடிஈ அமைப்பைக் காரணம் காட்டி சிங்கள மக்களைத் திசை திருப்பலாம்!
செல்வம் அடைக்கலநாதன்

விடுதலைப்புலிகளைக் காரணம் காட்டி இலங்கை அரசு, எதையும் திசை திருப்பலாம். எனவே, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மன்னாரில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " இலங்கை மிகவும் கொந்தளிப்பான நிலையில் உள்ளது. பொருளாதார பிரச்சினை பின்தங்கிய நிலையிலே இவ்வாறான ஒரு சூழலை மகிந்த ராஜபக்ச, அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது அரசு உருவாக்கி உள்ளது.

விடுதலைப்புலிகளைக் காரணம் காட்டி திசை திருப்புகிற கெட்டிக்காரத்தனம் இந்த அரசிடம் இருக்கிறது. எனவே, விடுதலைப்புலிகளை காரணம் காட்டி சிங்கள மக்களைத் திசை திருப்புகிற ஒரு நிலையை அவர்கள் ஏற்படுத்துவதற்கு நாம் அனுமதிக்ககூடாது. எனவே, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.