ஒரு எம்.பியின் விலை 10 கோடி ரூபாய்... மகிந்த ராஜபக்ச திட்டம்: எம்.பி அதிர்ச்சி தகவல்!

ஒரு எம்.பியின் விலை 10 கோடி ரூபாய்... மகிந்த ராஜபக்ச திட்டம்: எம்.பி அதிர்ச்சி தகவல்!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க இரண்டு வர்த்தகர்கள் கொழும்புவிற்கு வந்துள்ளதாகவும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் விலை 1 கோடி ரூபாய் என அவர்கள் நிர்ணயித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், " இலங்கை ராஜபக்ச அரசாங்கத்தின் வழியாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ள வெளிநாட்டில் இருக்கும் வர்த்தகர் ஒருவரும், இலங்கையில் கப்பல்களில் ஆயுதங்களை வைத்திருந்த வர்த்தகரும் இணைந்து டாலர்களில் பணத்தை கொழும்புக்குக் கொண்டு வந்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அவர்கள் இந்த பணத்தைக் கொண்டு வந்துள்ளனர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தற்போதைய விலை 10 கோடி ரூபாய். அப்படி வாங்கும் போது சிரமமாக இருந்தால் விலை மேலும் அதிகரிக்கும்.
பணத்திற்கு பின்னால் செல்பவர்கள் பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். இதன் மூலம் நாட்டில் இருக்கும் தூய்மையான அரசியல்வாதிகள் யார் என்பது நாட்டு மக்களுக்கு நிரூபணமாகும்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்," நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை பலத்தை பெற ரணில் விக்ரமசிங்கே எனக்கு அழைப்பு விடுத்தார். உங்களுக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதா என்று கேட்டதற்கு, இருக்கிறது என்றார். அப்படி என்றால் ஏன் என்னை அழைக்கின்றீர்கள் என்று கேட்டேன். 114 உறுப்பினர்கள் அல்ல 14 உறுப்பினர்களின் ஆதரவு கூட ரணிலுக்கு இன்னும் கிடைக்கவில்லை. ராஜபக்சவினர் இல்லாத இலங்கையை உருவாக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.