‘எதிரிகள் என்னைக் குறிவைக்கின்றனர்’ - உக்ரைன் அதிபர் வேதனை

`2வது நாளாக உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன'
‘எதிரிகள் என்னைக் குறிவைக்கின்றனர்’ - உக்ரைன் அதிபர் வேதனை
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்யாவின் தாக்குதலை 2வது நாளாக உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன என்றும் தனது குடும்பத்தை 2வதாக எதிரிகள் குறிவைத்துள்ளனர் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது 2வது நாளாக ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. தலைநகர் கீவ் பகுதிக்குள் நுழைந்துள்ள ரஷ்ய ராணுவம், ஆயுத கிடங்குகளை குறிவைத்து தாக்குதலை நடத்தி வருகிறது. மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்தியர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அவர்கள் அங்குள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், என் உயிருக்கு ரஷ்ய படைகள் குறிவைத்துள்ளது என்றும் தனது குடும்பத்தை 2வதாக எதிரிகள் குறிவைத்துள்ளனர் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குள் ரஷ்ய சீர்குலைவு கும்பல்கள் புகுந்துவிட்டன என்று தெரிவித்துள்ள அதிபர், உக்ரைனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் ரஷ்ய மக்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் தாக்குதலை 2வது நாளாக உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன என்றும் முதல் நாளில் எப்படி ரஷ்யாவை தனியாக எதிர்த்தோமோ 2வது நாளிலும் அப்படியே எதிர்கொள்கிறோம் என்றும் மேற்கத்திய நாடுகள் எங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளது என்றும் இதை எதிர்பார்த்தோம் என்றாலும்கூட அதிக வேதனையை தருகிறது என்றும் கூறியுள்ளார்.

சொன்ன வாக்குறுதியை மீறி ராணுவ தளவாடங்களுடன் குடியிருப்பு பகுதிகளையும் ரஷ்யா தாக்கி வருகிறது என்று தெரிவித்துள்ள அதிபர், உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குள் ரஷ்ய சீர்குலைவு கும்பல்கள் புகுந்துவிட்டன. ரஷ்ய சீர்குலைவு குழுக்கள் குறித்து உக்ரைன் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். முதலாவதாக என் உயிருக்கு ரஷ்ய படைகள் குறிவைத்துள்ளது. தனது குடும்பத்தை 2வதாக எதிரிகள் குறிவைத்துள்ளனர். உக்ரைன் அரசியல் தலைமையை அழிக்க சதி. உக்ரைனை அரசியல் ரீதியில் அழித்துவிட எதிரிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்" என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

Related Stories

No stories found.