பல கோடிகளைக் கடந்தது அகதிகளின் எண்ணிக்கை: ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

பல கோடிகளைக் கடந்தது அகதிகளின் எண்ணிக்கை: ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சர்வதேச அளவில் அகதிகளின் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்திருப்பதாக ஐ.நா அகதிகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக அகதிகளின் எண்ணிக்கை முதல்முறையாக 10 கோடியைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா, புர்கினா பாசோ, மியான்மர், நைஜீரியா, ஆப்கனிஸ்தான், காங்கோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறிய மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில் 9 கோடியாக இருந்ததாகத் தெரிவித்துள்ள ஐ.நா அகதிகள் அமைப்பின் தலைவர் ஃபிலிப்போ கிரான்டி, நடப்பாண்டில் உக்ரைன் போர் காரணமாக 1.6 கோடி மக்கள் இடம் பெயர்ந்ததால் இந்த எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு கருதி உள்நாட்டுக்கு உள்ளேயே இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை கடந்த 2020-ல் 5.41 கோடியாக இருந்ததாகத் தெரிவித்த ஃபிலிப்போ கிரான்டி, அது தற்போது 5.91 கோடியாக உயர்ந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in