லிஃப்டில் குதறிய நாய்... 25 வயது இளம் பெண்ணிற்கு நடந்த துயரம்

பதறவைக்கும் வீடியோ
லிஃப்டில் குதறிய நாய்... 25 வயது இளம் பெண்ணிற்கு நடந்த துயரம்

25 வயது இளம் பெண்ணை நாய் ஒன்று கடித்து குதறும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடூர சம்பவம் கொலம்பியால் நடந்துள்ளது.

கொலம்பியாவின், குகுடா என்ற நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்திற்கு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த நாய் ஒன்று அந்த பெண்ணை தாக்கியுள்ளது. நாயின் தாடைகளைக் கையில் பிடித்துக்கொண்டு அந்தப் பெண் தப்பிக்க முயற்சித்துள்ளார். ஆனால், அந்த நாய் கொடூரமாக கடித்து தாக்கியது.

ஒரு கட்டத்தில் அங்கிருந்த லிஃப்ட்டுக்குள் நாயை இளம்பெண் இழுத்துச் சென்றுள்ளார். பின்னர் லிஃப்டில் இருந்து நாயுடன் வெளியே வந்த இளம்பெண் பக்கத்து வீட்டுக்காரர் உதவியை நாடியுள்ளார். அவர்கள் அந்த பெண்ணை நாயிடம் இருந்து மீட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் லிஃப்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணிற்கு கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் இளம் பெண்ணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வெறிநாயை காவல்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.