உலகத்திலேயே 24.7 மணி நேரம் தான் வேலை... எந்த நாட்டில் தெரியுமா?

உலகத்திலேயே 24.7 மணி நேரம் தான் வேலை... எந்த நாட்டில் தெரியுமா?

வாரம் 70 மணி நேரம் இந்திய இளைஞர்கள் உழைக்க வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ள நிலையில், உலகில் பல நாடுகளில் மிகக் குறைந்த அளவிலான பணி நேரங்களே  நடைமுறையில் உள்ளது.

இந்தியா கடந்த 30 ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சியை போன்று மீண்டும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என இன்போசிஸ் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.  அதன்படி பார்த்தால் வார விடுமுறை எடுக்காமல் தினசரி 10 மணி நேரம் வேலை செய்தால் மட்டுமே  இது சாத்தியம்.

ஆனால் இது தொழிலாளர்களை உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கும். அதுமட்டுமில்லாமல்  தொழிலாளர் புரட்சியின் மூலம் கொண்டு வரப்பட்ட 8 மணி நேர வேலை நேர கொள்கைக்கு எதிரான முதலாளித்துவ மனநிலை என எதிர் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது தினமும் 8 மணி நேர வேலை,  வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விடுமுறை என நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 

உலக தொழிலாளர் அமைப்பு வெளியிட்டிருக்கும் பட்டியலின்படி உலகிலேயே குறைவான வார வேலை நேரத்தை கொண்ட நாடாக தெற்கு பசிபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள வனுவாடு என்ற நாடு விளங்குகிறது. அங்கு  வாரத்துக்கு 24.7 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக உள்ளது. அதற்கடுத்த இடத்தில் அதே தெற்கு பசிபிக் நாடாக கிரிபாட்டி உள்ளது. அங்கு 27.3 மணி நேரம் பணிநேரமாக இருக்கிறது. 

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஒரு நபர் வாரம் 28.6 மணி நேரம் சராசரியாக வேலை செய்கிறார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் ஒருவர் சராசரியாக வாரம் 28.8 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார். ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் 29.5 மணி நேரம் மட்டுமே வாராந்திர சராசரி பணி நேரமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் வாரத்துக்கு 32.3 மணி நேரம் என்பது சராசரி வேலை நேரமாக உள்ளது. 

பிரிட்டனில் வாரத்துக்கு 35.9 மணி நேரம் என்பது பணி நேரமாக இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு நபர் வாரத்துக்கு சராசரியாக 36.4 மணி நேரம் மட்டுமே பணிபுரிகிறார். சிங்கப்பூரில் 42.6 மணி நேரமாக உள்ளது. மலேசியாவில் 43.2 மணி நேரம் வாராந்திர சராசரி பணி நேரமாக இருக்கிறது. 

இந்தியாவின் அண்டை நாடுகளை எடுத்துக்கொண்டால் வங்கதேசத்தில் 46.9, பாகிஸ்தானில் 46.7, மாலத்தீவில் 46.2, சீனாவில் 46.1, மியான்மரில் 44.6, நேபாளத்தில் 40.3, ஆப்கானிஸ்தானில் 37.9, இலங்கையில் 36.2 என்பது வாராந்திர சராசரி பணிநேரமாக உள்ளது.

அதிக பணிநேரங்களை கொண்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ளது  ஐக்கிய அரபு அமீரகம்தான். அங்கு வாரத்துக்கு சராசரியாக 52.6 மணி நேரம் பணிபுரிகிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியா உள்ளது. அங்கு வாரத்துக்கு 50.8 மணி நேரம் சராசரி பணி நேரமாக இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான பூடானில் வாராந்திர சராசரி பணி நேரம் 50.7 ஆக இருக்கிறது.


வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை

நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!

3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!

5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!

நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in