செல்போன் தயாரிப்பில் பின்தங்கிய சீனா... எகிறி அடிக்கும் இந்தியா!

செல்போன் உற்பத்தி
செல்போன் உற்பத்தி

செல்போன் மற்றும் அதன் உதிரி பாகங்கள்தயாரிப்பில் உலகின் முன்னணி நாடாக இருந்து வந்த சீனா தற்போது அந்த தொழிலில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் அந்தத் தொழிலில் இந்தியா அதில்  வேகமாக முன்னேறி வருவது உலக நாடுகளை வியக்க வைத்திருக்கிறது.

செல்போன் உற்பத்தி நிறுவனம்
செல்போன் உற்பத்தி நிறுவனம்

உலக அளவில் செல்போன் உற்பத்தி மற்றும் அதற்கான உதிரிப் பாகங்கள் தயாரிப்பு ஏற்றுமதியில் இத்தனை ஆண்டுகளாக சீனா ஆதிக்கம் செலுத்தி வந்தது.  ஆனால், இந்தியாவின் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளால் சீனாவின் இந்த மார்க்கெட் இப்போது பெரும் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  

இதற்கு முன்பு இந்தியாவில் உள்ள செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான செல்போன் பாகங்கள் அனைத்தும்  சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், இப்போது இந்தியா சீனாவிலிருந்து உதிரிப்பாகங்களை வாங்குவதை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளது. சீனாவை புறந்தள்ளிவிட்டு வியட்நாம், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து ‘சிப் செட்’ களை பெற இந்தியா திட்டமிட்டுள்ளது. 

இதன் காரணமாக, சீனாவின் செல்போன் உற்பத்தி தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.  அதுமட்டுமின்றி, இந்திய அரசு பிஎல்ஐ திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிப்பதால், பல பெரிய சிப் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கியுள்ளன. இதன் காரணமாகவும் சீனாவின் செல்போன் உற்பத்தியானது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் சீனாவின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான ‘செமிகண்டக்டர் மேனுஃபேக்ச்சரிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் (SMIC)’ பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. நான்காவது காலாண்டில் இந்நிறுவனம் 55 சதவீத இழப்பை சந்தித்துள்ளது. இதற்கு, உலகளாவிய தேவை குறிப்பாக இந்திய வணிகத்தில் அதன் தேவை மிகவும் குறைந்துள்ளது காரணமாகக் கூறப்படுகிறது. இதுபோல சீனாவின் பல முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in