தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பஸ் மீது பயங்கரமாக மோதிய ரயில்: வைரலாகும் வீடியோ

பேருந்து மீது ரயில் மோதும் காட்சி
பேருந்து மீது ரயில் மோதும் காட்சிதண்டவாளத்தைக் கடக்க முயன்ற பஸ் மீது பயங்கரமாக மோதிய ரயில்: வைரலாகும் வீடியோ

வங்கதேசத்தில் தண்டாவளத்தை வேகமாக கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வங்கதேசத்தில் டாக்காவில் மாலிபாக் பகுதி உள்ளது. இப்பகுதியில் ரயில் தண்டவாளம் உள்ளது. நேற்று நள்ளிரவு இப்பகுதியில் வந்த தனியார் பேருந்து தண்டாவளத்தை வேகமாகக் கடக்க முயன்றது. அப்போது பஞ்சகர் செல்லும் த்ருதஜன் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இதனால் ரயிலில் பேருந்து சிக்கிக் கொண்டது. பேருந்தை இழுத்துக் கொண்டு ரயில் சென்றது. இதைக்கண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ரயிலை நோக்கி ஓடினர். இதையடுத்து உடனடியாக அந்த ரயில் நிறுத்தப்பட்டது.

இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மாலிபாக் மற்றும் மௌச்சக் பகுதிகளில் பயணிகளை இறக்கி விட்டு காலியாக வந்த பேருந்து வேகமாக வந்துள்ளது. ரயில் வருவதைக் கண்ட பேருந்து ஓட்டுநர், தண்டவாளத்தை வேகமாக கடந்து விட முயன்ற போது பேருந்து மீது ரயில் மோதியது தெரிய வந்தது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.

பேருந்து மீது ரயில் மோதும் காட்சியை அவ்வழியாகச் சென்ற ஒருவர் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது இந்த பதைபதைக்க வைக்கும் காட்சி , சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in