விருந்துக்கு வந்த தந்தையின் நண்பர்களை தெறிக்கவிட்ட சிறுவன்!

சவுதியில் நடந்த சம்பவம்
தந்தையுடன் சவுதி அரேபியச் சிறுவன்
தந்தையுடன் சவுதி அரேபியச் சிறுவன்twitter

விருந்துக்கு வந்த தந்தையின் நண்பர்களிடம், “உடனடியாக சாப்பிட்டுவிட்டு வெளியே போங்க. உங்களுக்கு சமைத்துப் போடவா என் அம்மா இருக்காங்க” என்று சவுதிச் சிறுவன் தெறிக்கவிடும் வீடியோ வைரலாகியுள்ளது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டுக்கு நண்பர்களை அழைத்து விருந்து வைத்துள்ளார். அப்போது, தாயார் சமையலறையில் உணவுகளை சமைத்துக் கொண்டிருக்க, சிறுவன் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு உணவைப் பரிமாறியுள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்துக்குச் சென்ற சிறுவன், “உங்களுக்கு சமைத்துப் போடவா என் அம்மா இருக்காங்க. உடனடியா சாப்பிட்டு வீட்டைவிட்டு வெளியே போங்க” என்று பேசி தெறிக்கவிட்டுள்ளார்.

சிறுவனின் பேச்சால் விருந்துக்கு வந்தவர்கள் சிரித்துக் கொண்டே சாப்பிடுகின்றனர். சிறுவனின் இந்த மழலை பேச்சு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in