தான்சானியாவின் முதல் பெண் அதிபர் இந்தியா வருகை... 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள திட்டம்!

தான்சானியா அதிபர் சாமியா சுலுகு ஹசன்
தான்சானியா அதிபர் சாமியா சுலுகு ஹசன்

இந்தியாவிற்கு 4 நாள் அரசு முறை பயணமாக வந்துள்ள தான்சானியா அதிபர் சாமியா ஹசன், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

தான்சானியாவின் முதல் பெண் அதிபரான சாமியா சுலுகு ஹசன், இந்தியாவிற்கு 4 நாள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ளார். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தான்சானிய அதிபர் ஒருவர் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.

இந்த பயணத்தின் போது இந்தியாவுடன், பரஸ்பர ஒத்துழைப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜனவரி யூசுப் மகாம்பா தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளிடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்புணர்வு தொடர்பாக மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகலாம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தான்சானிய அதிபரை வரவேற்கும் இந்திய அதிகாரிகள்
தான்சானிய அதிபரை வரவேற்கும் இந்திய அதிகாரிகள்

இந்த பயணத்தின் போது, இந்திய அரசு மற்றும் இந்திய தனியார் நிறுவனங்களுடன் பங்களிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் மகாம்பா தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான ஒப்பந்தங்களை மேற்கொள்வது குறித்து தான்சானியா அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக விமான நிலையத்திற்கு வருகை தந்த தான்சானிய அதிபருக்கு, இந்திய அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in