தைவான் நிலநடுக்கத்தால் 7 பேர் பலி... 730 பேர் படுகாயம்:. அதிர வைக்கும் வீடியோ!

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சரிந்த கட்டிடங்கள்
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சரிந்த கட்டிடங்கள்

தைவானில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 730 பேர் படுகாயமடைந்தனர். தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சரிந்த கட்டிடங்கள்
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சரிந்த கட்டிடங்கள்

தைவான் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் தைவானின் கிழக்கு நகரான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.

நிலநடுக்கம் காரணமாக, தைப்பேவில் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதிகாலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கம் எதிரொலியாக மக்கள் அலறியடித்து, பாதுகாப்பான இடங்களைத் தேடி தஞ்சம் அடைந்தனர். சாலைகளில் கார்கள், டூவீலர்கள் உள்ளிட்டவற்றில் செல்லும்போது நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாலங்களும் அதிர்வால் குலுங்கின.

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சரிந்த கட்டிடங்கள்
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சரிந்த கட்டிடங்கள்

தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது தான் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், நிலநடுக்கம் ரிக்டரில் 7.4 ஆக பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டது.

அந்நாட்டின் ஒகினவா மாகாணத்தின் தெற்கு கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கான அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டன. இதேபோன்று பிலிப்பைன்ஸிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. எனினும், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து சுனாமி எச்சரிக்கை பின்னர் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 730 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in