புர்கா அணிய தடை... நாடாளுமன்றம் ஒப்புதல்

சுவிட்சர்லாந்து நாட்டில் புர்கா அணிய தடை
சுவிட்சர்லாந்து நாட்டில் புர்கா அணிய தடை

சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்காக்கள் அணிய தடை விதித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்து நாட்டில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் நிக்காப் எனும் முகத்தை மறைக்கும் துணிகள் மற்றும் புர்காக்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொது இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் குழப்பம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மையானோர் நிக்காப்புகளை அணிய அனுமதிக்க வேண்டும் எனவும் புர்காக்களை அணிய தடை விதிக்கலாம் எனவும் வாக்களித்தனர்.

இதையடுத்து சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தெற்கு டிசினோ மற்றும் வடக்கு செயின்ட் காலன் ஆகிய மாகாணங்களில் விதிக்கப்பட்டிருந்த தடையை போலவே நாடு முழுவதும் தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சுவிட்சர்லாந்து நாட்டின் மேலவை இதற்கு ஒப்புதல் அளித்து இருந்த நிலையில் நேற்று மக்களவையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 151க்கு 29 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் புர்காக்கள் அணிவதை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

புர்கா அணிய தடை
புர்கா அணிய தடை

இதன்படி கண்கள் மட்டும் தெரியுமாறு நிக்காப் அணிவதற்கு தடை ஏதும் இல்லை. இருப்பினும் பொது இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் புர்காக்கள் அணிந்து பெண்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுவோருக்கு ஆயிரம் பிரான்க்ஸ் அபராதமாக விதிக்கப்பட உள்ளது. இது அமெரிக்க மதிப்பில் சுமார் 1,100 டாலர்கள் ஆகும். ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகள் ஏற்கெனவே பொது இடங்களில் புர்கா அணிய தடை விதித்து சட்டம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in