காஸா மீதான தாக்குதலைத் தடுக்க மனிதாபிமான அடிப்படையில் உடனே போரை நிறுத்த வேண்டுமென ஜோர்டான் அழைப்பு விடுத்துள்ளது.
காஸாவில் இஸ்ரேல் படைகளுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
ஜோர்டானால் முன்வைக்கப்பட்ட இந்தத் தீர்மானம், பிராந்தியத்தில் உடனடியான மற்றும் நீடித்த மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததுள்ளது. இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ள சூழலில் ஐ.நா பொதுச் சபையில் இந்த தீர்மானத்தை ஜோர்டான் கொண்டுவந்து முன்மொழிந்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கு 120 நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும், 45 நாடுகள் வாக்களிக்காமல் தவிர்த்தன. அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் பகுதிகளில் தாக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்டு, பணயக் கைதிகளுடன் காஸா பகுதிக்குத் திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில், கல்வீச்சு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்... ரூ.20 கோடி கேட்டு பரபரப்பு!
பிக் பாஸ் வீட்ல இந்த கூத்தெல்லாம் நடக்குது... உண்மையை போட்டுடைத்த முன்னாள் போட்டியாளர்!