போரை நிறுத்துங்கள்... பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்- இஸ்ரேலை வலியுறுத்தும் மலாலா

மலாலா
மலாலா

மனித நேயமற்ற முறையில் கொடூரமான தாக்குதல் நடத்துவதை கைவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இஸ்ரேல் உதவ வேண்டுமென மனித உரிமை செயற்பாட்டாளர் மலாலா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த 2 வாரமாக உக்கிரமாக போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனின் காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் பன்னாட்டு படைகளின் உதவியுடன் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். காஸா நகரமே சிதைந்துபோய் பலர் உயிருக்கு போராடி வருகிறார்கள். மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இஸ்ரேலின் இந்த செயலுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இந்த தாக்குதலை தாங்கள் செய்யவில்லை என இஸ்ரேல் அரசு மறுத்துள்ளது. இந்த நிலையில் மனித உரிமை செயற்பாட்டாளர் மலாலா யூசுப் இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன் மக்களுக்காக 3 லட்சம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். பாலஸ்தீன் மக்களுக்கு உதவிகளை செய்து வரும் 3 தொண்டு நிறுவனங்கள் மூலமாக இந்த தொகையை அவர் வழங்க உள்ளார்.

"காஸாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் அதிர்ச்சி அடைந்தேன். இஸ்ரேல் அரசாங்கம் காஸாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு 3 தொண்டு நிறுவனங்கள் மூலமாக 3 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்குகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்

10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in