இலங்கைக்கு விசா வழங்குவது நிறுத்தமா?- இந்தியத் தூதரகம் விளக்கம்!

இலங்கைக்கு விசா வழங்குவது நிறுத்தமா?- இந்தியத் தூதரகம் விளக்கம்!

இலங்கையில் தொடர்ச்சியாக வன்முறைகள் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை அரசு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

இலங்கை கலவரம்
இலங்கை கலவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான விலையேற்றம், பொருளாதார சீரழிவு, போராட்டம், ஆட்சி மாற்றம் எனத் தொடர்ச்சியாகப் பதற்ற நிலையே நிலவுகிறது. பொதுமக்களின் ஒரு மாத போராட்டத்தையடுத்து மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரின் வீடுகள் மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. ராணுவத்தின் உதவியுடன் அவர் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார். இலங்கையில் தொடர் போராட்டங்களை நடைபெற்று வரும் நிலையில் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நேற்று பதவியேற்றார். தொடர் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவ முன்வந்துள்ளன.

இந்நிலையில் இலங்கை அரசு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியத் தூதரக ட்விட்டர் பக்கத்தில், “விசா வழங்குவது நிறுத்தம் என்ற தகவல் முற்றிலும் தவறானது. விசா பிரிவில் பணியாற்றும் ஊழியர்களில் பலர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இதனால் விசா வழங்கும் பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு வேண்டிய முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.