தமிழகத்திற்கு வர முயன்ற ஈழத்தமிழர்கள் தடுத்து நிறுத்தம்: இலங்கை கடற்படை நடவடிக்கை

தமிழகத்திற்கு வர முயன்ற ஈழத்தமிழர்கள் தடுத்து நிறுத்தம்: இலங்கை கடற்படை  நடவடிக்கை

தமிழகம் வர முயன்ற 14 ஈழத்தமிழர்களை பேசாலை பகுதியில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் படகு மூலம் தமிழகம் தப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து தப்பி வர முயன்ற 5 பெண்கள், 5 சிறுவர்கள் உள்பட 14 ஈழத்தமிழர்களை இலங்கை கடற்படையினர் பேசாலை பகுதியில் கைது செய்தனர். அவர்களை மன்னார் போலீஸாரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். இவர்களில் நான்கு பேர் வவுனியா மாவட்டத்தையும், மற்றவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in