அடித்துக் கொல்லப்பட்ட ஆளும் கட்சி எம்.பி!- இலங்கையில் தொடரும் பதற்றம்

இலங்கை எம்.பி அமரகீர்த்தி அதுகோரலா
இலங்கை எம்.பி அமரகீர்த்தி அதுகோரலா

இலங்கையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கலவரக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கிறது. இலங்கை அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் அதிகாரத்தைச் செலுத்தியதுதான் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் கூறி எதிர்கட்சியினரும் போராட்டக்காரர்களும் கடந்த சில மாதத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவித்தார். ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வருவதாக இல்லை. ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு, கலவரம் என இலங்கை போர்க்களமாகவே காட்சியளித்து வந்தது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் நாடுமுழுவதும் தொடர்ந்து கலவரங்கள் நடைபெற்று வருகின்றன.

நிட்டம்புவு பகுதியில் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலாவில் காரை மறித்தனர். பதற்றத்தில் போராட்டக்காரர்களை நோக்கி அதுகோரலா துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதில் மூன்று பேருக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கொந்தளிப்பான போராட்டக்காரர்கள் அதுகோரலா மற்றும் அவருடன் காரில் பயணித்தவர்களை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள். இதையடுத்து சம்பவ இடத்திலேயே இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அதுகோரலா உயிரிழந்தார். இதனால் இலங்கையில் பதற்றம் தொடர்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in