மோதலுக்கு மத்தியில் நடந்த இலங்கை துணை சபாநாயகர் தேர்தல்: வெற்றி யாருக்கு?

மோதலுக்கு மத்தியில் நடந்த இலங்கை துணை சபாநாயகர் தேர்தல்: வெற்றி யாருக்கு?

இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய துணை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இதையொட்டி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அஜித் ராஜபக்ச துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட பின், முதல் நாடாளுமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் இம்தியாஸ் ரோகினி கவிரத்னாவை துணை சபாநாயகர் வேட்பாளராக, அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசா முன்மொழிந்தார். ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியில் இருந்து அஜித் ராஜபக்ச பெயர் முன் மொழியப்பட்டது.

அஜித் ராஜபக்ச
அஜித் ராஜபக்ச

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஆளும் கட்சியில் இருந்து விலகிய விமல் வீரவன்ச உட்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நாடு இருக்கும் நிலையில் பிரதமரும், எதிர்கட்சி தலைவரும் இணைந்து தீர்மானம் ஒன்றை எட்டவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனையும் மீறி வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், தமது உறுப்பினர்கள் வாக்குகளை நிராகரிப்பார்கள் என்று விமல் வீரவன்ச எச்சரித்தார்.

இதனால் துணை சபாநாயகர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்ட இருவரில் ஒருவர் விலகிக் கொள்ள சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனா அவகாசத்தை வழங்கினார். ஆனால், இரண்டு தரப்பிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்படி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அஜித் ராஜபக்சவுக்கு 109 வாக்குகளும், இம்தியாஸ் ரோகினி கவிரத்னாவுக்கு 78 வாக்குகளும் கிடைத்தன. 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இதனையடுத்து துணை சபாநாயகராக அஜித் ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in