
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 25 கன்டெய்னர் மிளகாய்கள், அதில் நச்சுப்பொருள் இருப்பதாக கூறி பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள வியாபாரிகள், மிளகாய் விலை பாகிஸ்தானில் குறைவாக இருப்பதை அறிந்து அங்கு மிளகாய் ஆர்டர் கொடுத்திருந்தனர். அவர்கள் ஆர்டரின் பேரில் பாகிஸ்தானில் இருந்து 25 கன்டெய்னர்களில் மிளகாய்கள் ஏற்றி அனுப்பப்பட்டிருந்தன. அந்த மிளகாயை சுகாதார அமைச்சகத்தின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் தரத்தை பரிசோதித்தனர்.
சோதனையின் முடிவில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) எனும் நச்சுப்பொருள் கலந்திருப்பதாகவும் அது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் என்றும் தெரிவித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மிளகாய் இறக்குமதிக்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து அந்த கன்டெய்னர்களை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன் இதேபோல அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்திருந்த மக்காச்சோளம் கொண்டுவந்திருந்த ஒரு சரக்கு கப்பல் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உணவின் தரம் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக சுகாதார அமைச்சகத்தின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தொலைபேசி எண் ஒன்றையும் (0112112718) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே... இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!
ஈரோட்டில் அதிர்ச்சி! அதிகாலையில் கோர விபத்து... 3 பேர் உயிரிழப்பு!
பெரும் சோகம்... பட்டாசு வெடித்து சிதறியதில் 4 வயது சிறுமி உயிரிழிப்பு!
திருச்செந்தூரில் சஷ்டி விழா தொடங்கியது... 18ம் தேதி சூரசம்ஹாரம்!
300 டன் பட்டாசு குப்பை சேகரிப்பு... விடிய விடிய பணியாற்றிய 19,600 தூய்மைப் பணியாளர்கள்!