`நிதி நெருக்கடியில் தவிக்கிறோம்; கடனை செலுத்த முடியவில்லை'- இலங்கை மத்திய வங்கி கவலை

இலங்கை மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கி

``கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, வரலாற்றில் முதல் முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை” என அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவருவதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என இலங்கை மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்தார். இலங்கையின் புதிய பிரதமராகக் கடந்த சில தினங்களுக்கு முன் ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக் கொண்டார். ஆனாலும் விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு, கலவரம் உள்ளிட்ட பிரச்சனைகளால் இலங்கை கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இலங்கை முழுவதும் போராட்டங்களும் தொடர்கின்றன. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே. “இலங்கையில் விவசாயம் செய்வதற்கு உரம் இல்லை. இதனால் நெல் சாகுபடி குறைந்து விடும். ஆகஸ்டு மாதத்தில் உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாங்கள் திவால் நிலைக்கு வந்துவிட்டோம்” என வேதனை தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிக்கையில், “இலங்கையில் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதமானது மிகவும் மந்தமாக இருக்கும். தற்போதுள்ள 30 சதவிகித பணவீக்கம் 40 சதவிகிதமாக அதிகரிக்கும். கடன் மறு சீரமைப்பு இருக்கும் வரை எங்களால் கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலை உள்ளது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, வரலாற்றில் முதல் முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in