பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு... ஸ்லோவாக்கியா நாட்டில் கடும் பதற்றம்!

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த நாட்டில் கடுமையான பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ
ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ

பிரதமர் ராபர்ட் ஃபிகோ இன்று ஹண்ட்லோவா நகரில் நடந்த ஒரு அரசாங்கக் கூட்டத்திற்குப் பின்னர் பொதுமக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். பிரதமர் ஃபிகோ மீது பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அதில் ஒரு குண்டு அவரின் அடிவயிற்றில் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர்

இதனைத் தொடர்ந்து பாதுகாவலர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஃபிகோ உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் எனவும், அவர் ஹெலிகாப்டர் மூலம் பான்ஸ்கா பைஸ்ட்ரிகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஸ்லோவாக் அரசாங்க அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்லோவாக்கியா தலைநகர் பிராட்டிஸ்லாவாவிலிருந்து வடகிழக்கே 150 கிமீ தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 59 வயதான ஃபிகோ, கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் 3-வது முறையாக பிரதமர் ஆனார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் உறுப்பினராக உள்ள ஸ்லொவாக்கியா நாட்டின் பிரதமரான ஃபிகோ, ரஷியாவுக்கு ஆதரவான மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். ராபர்ட் ஃபிகோ தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் ஜுஜானா கேபுடோவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


தேர்வு எழுத அனுமதி மறுப்பு... ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் தற்கொலை!

பாடகி சுசித்ராவுக்கு முன்னாள் கணவர் கொடுத்த ரியாக்‌ஷன்... வைரலாகும் வீடியோ!

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்... ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

ஷாக்... இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண் மீது கொலைவெறி தாக்குதல்!

டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து கான்பூரிலும் அதிர்ச்சி... 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in