மேடையில் நிறுத்திவைக்கப்பட்ட ராப் பாடகரின் உடல்!

அமெரிக்காவில் நடந்த விநோத சம்பவம்
மேடையில் நிறுத்திவைக்கப்பட்ட ராப் பாடகரின் உடல்!
ராப் பாடகர் மார்க்கெல் மாரோவ்

அமெரிக்காவைச் சேர்ந்த ராப் பாடகர் மார்க்கெல் மாரோவ், ‘கூநியூ’ எனும் பெயரில் இசை ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடந்த மாதம், மேரிலாண்ட் பகுதியில் உள்ள டிஸ்ட்ரிக்ட் ஹெய்ட்ஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தின் கார் நிறுத்துமிடத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் மார்க்கெல் மாரோவ் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது இறுதிச் சடங்கை துயரமற்ற வகையில் நடத்த வேண்டும் என அவரது தாய் பாட்ரிஸ் மாரோவ் முடிவெடுத்தார். அதன்படி இரவுவிடுதி ஒன்றில் இசை நிகழ்ச்சியில் தனது மகனின் உடலைக் காட்சிப்படுத்த வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். நண்பர்களின் உதவியுடன், மார்க்கெல் மாரோவின் பதப்படுத்தப்பட்ட உடலை வாஷிங்டனில் உள்ள இரவுவிடுதியில் காட்சிப்படுத்தினார். மேடையில் ஜீன்ஸ், டிசர்ட் அணிவிக்கப்பட்டு மார்க்கெல் மாரோவின் உடல் நிறுத்தப்பட்டிருந்தது. அவரது தலையில் ஒரு கிரீடமும் அணிவிக்கப்பட்டிருந்தது.

அவரது ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு அவரது பாடல்களைப் பாடினர். இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி நடத்தப்பட்ட இரவுவிடுதியின் நிர்வாகம் அதிருப்தியடைந்திருக்கிறது. ராப் பாடகரின் உடல் மேடையில் காட்சிப்படுத்தப்படும் எனும் தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று விடுதி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.