முடிவுக்கு வந்தது 23 நாள் இழுபறி: பாகிஸ்தானின் 33வது பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் தேர்வு!

ஷெபாஷ் ஷெரீப்
ஷெபாஷ் ஷெரீப்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று 23 நாள்களுக்குப் பிறகு ஷெபாஷ் ஷெரீப் பிரதமராக இன்று தேர்வு செய்யப்பட்டார். அவர் நாளை பதவியேற்க உள்ளார்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த மாதம் 8-ம் தேதி நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரான, ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

இதனால் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். இதேபோல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகியவையும் கணிசமான இடங்களைப் பிடித்தன. ஆனால், எந்த கட்சியும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களைப் பெறவில்லை.

நவாஸ் ஷெரீப், பிபிபி கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி
நவாஸ் ஷெரீப், பிபிபி கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி

இந்நிலையில் பிடிஐ கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க முன்வரவில்லை. அதே நேரத்தில் பிஎம்எல்-என், பிபிபி கட்சிகள் ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. ஆனால், பிரதமர் பதவி, அதிகாரப் பகிர்வில் இருகட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படாமல் கடந்த 23 நாள்களாக இழுபறி நீடித்தது. இந்நிலையில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஷ் ஷெரீப் பிரதமர் பதவிக்கு இன்று தேர்வானார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவருக்கு மொத்தம் உள்ள 336 இடங்களில் 201 உறுப்பினர்களின் வாக்குகள் கிடைத்தன.

இதன்மூலம் பாகிஸ்தானின் 33வது பிரதமராக நவாஸ் ஷெரீப் நாளை பதவியேற்க உள்ளார். மேலும் ஷெபாஷ் ஷெரீப் கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஆகஸ்ட் வரை ஏற்கெனவே பிரதமர் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in