பாகிஸ்தான் பிரதமரானார் ஷெபாஸ் ஷெரீஃப்!

பாகிஸ்தான் பிரதமரானார் ஷெபாஸ் ஷெரீஃப்!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீஃப் நாடாளுமன்ற செயலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் பிரதமராக அவர் தேர்வாகியுள்ளார்.

பாகிஸ்தானின் நாடாளுமன்றமான தேசிய அவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in