மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: மிருகமாய் மாறிய தந்தை கைது

மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: மிருகமாய் மாறிய தந்தை கைது

குடிபோதையில் தனது மூன்றரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் உள்ள யாழ்நகரில் மது போதையில் தனது மூன்றரை வயது பெண் குழந்தையை தந்தை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து அவரது மனைவி போலீஸில் புகார் செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து குழந்தையின் தந்தையை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " கஞ்சா மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான சிறுமியின் தந்தை, மனைவியை பிறருடன் தகாத உறவில ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரைணையில் தெரிய வந்துள்ளது. அத்துடன் மது போதையில் தனது மூன்றரை வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தததாக அவர் மீது அவரது மனைவியே புகார் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவரது தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்" என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in