
செனகல் நாட்டின் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
செனகல் நாட்டின் மேற்கு டிவௌவான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் கருகினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவத்திற்கு அதிபர் மேக்கி சால் இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. கடந்த ஆண்டு இதேபோல பச்சிளம் குழந்தைகளுக்கான பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில், நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.