ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இறந்து விடுவார்: உக்ரைன் உளவுத்துறை தலைவர் திடீர் தகவல்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் புற்றுநோயால் விரைவில் இறந்து விடுவார் என்று உக்ரைன் ராணுவ உளவுத்துறை தலைவர் கைலோ புடோனோவ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி ஓராண்டை நெருங்கி வருகிறது. இதற்கிடையில் புத்தாண்டு அன்று, ரஷிய ராணுவத்தினர் தங்கியிருந்த முகாம் மீது உக்ரைன் ராணுவத்தினர், அமெரிக்க ஏவுகணைகளைக்கொண்டு தொடர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான ரஷிய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இதனால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் பரவி வருகிறது.

 கிரிலோ புடனொவ்
கிரிலோ புடனொவ்

இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் ராணுவ உளவுத்துறை தலைவர் கிரிலோ புடனொவ் கூறுகையில், " 70 வயதான ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோயால் சீக்கிரமே இறந்து விடுவார். புதின் தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரது மரணத்திற்கு முன்பே இந்த போர் முடிவுக்கு வரவேண்டும். 2023-ம் ஆண்டில் உக்ரைன் வெற்றிகரமாக வெளிப்படும். புதினின் மரணம் முழு உலகிற்கும் பயனளிக்கும்" என்று கூறியுள்ளார். உக்ரைன் ராணுவ தலைவர் கூறிய இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in