உக்ரைன் போரில் முதன்முறையாக கின்ஜல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை!

அதிநவீன ஏவுகணையை ஏவி ஆயுதக் கிடங்கை அழித்த ரஷ்யா
2018-ல் கின்ஜல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை செய்யப்பட்ட காட்சி அடங்கிய காணொலியில் இருந்து எடுக்கப்பட்ட படம்
2018-ல் கின்ஜல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை செய்யப்பட்ட காட்சி அடங்கிய காணொலியில் இருந்து எடுக்கப்பட்ட படம்

உக்ரைன் போரில் முதன்முறையாக கின்ஜல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தியிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது. உக்ரைனின் மேற்குப் பகுதியில் இவானோ - ப்ராங்கிவ்ஸ்க் பகுதியில் உள்ள டெலியாடின் கிராமத்தில் உள்ள ஒரு ஆயுக்கிடங்கை இந்த ஏவுகணை மூலம் தாக்கி அழித்திருப்பதாகவும் ரஷ்யா கூறியிருக்கிறது. அந்த ஆயுதக்கிடங்கின் பாதாள அறைகளில் ஏவுகணைகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள் ரஷ்யப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

அதிபயங்கரப் போர்க்கருவி

அமெரிக்காவிடம்கூட இல்லாத அளவுக்கு அதிபயங்கரப் போர்க்கருவி இது. சூப்பர்சோனிக் எனும் கட்டத்தைத் தாண்டி, ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தில் ரஷ்யா உருவாக்கிய இந்த ஏவுகணை, உலக நாடுகளால் அச்சத்துடன் பார்க்கப்படும் ஒன்றாகும்.

மிகச் சிறந்த ஆயுதம் என ரஷ்ய அதிபர் புதினால் புகழ்ந்துரைக்கப்படும் இந்த ஏவுகணை, ஒலியைவிட 10 மடங்கு வேகத்தில் பாய்ந்து செல்லக்கூடியது. எந்தவிதமான கட்டுப்பாட்டு அமைப்புகளையும் அநாயாசமாகக் கடந்துவிடும் என்பது இதன் இன்னொரு சிறப்பு.

2018-ல் உருவாக்கிய இந்த ஏவுகணையை இதுவரை போரில் பயன்படுத்தியதாக ரஷ்யா தெரிவித்ததில்லை. இந்நிலையில், இந்தப் போரில் முதன்முறையாக இது பயன்படுத்தப்பட்டிருப்பதாக ரஷ்ய ஊடகமான ஆர்ஐஏ நோவோஸ்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in