உக்ரைன் துறைமுகத்தை தகர்க்க ரஷ்யா திட்டம்

அதிபர் ஸெலன்ஸ்கி குற்றச்சாட்டு
அதிபர் ஸெலன்ஸ்கி
அதிபர் ஸெலன்ஸ்கி

உக்ரைனில் ஒடேசா நகரின் துறைமுகத்தை தகர்க்க ரஷ்ய படைகள் தயாராகி வருவதாக அந்நாட்டு அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது 11வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள அர்சன் உள்ளிட்ட பல நகரங்களை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.

இதனிடையே கருங்கடலில் முக்கிய நகரான ஒடேசாவின் துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷ்ய படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஒடேசா நகரின் துறைமுகத்தை குண்டுவீசி தகர்க்க ரஷ்ய படைகள் தயாராகி வருவதாக அந்நாட்டு அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. உக்ரைனில் எந்த பகுதியில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உடனடியாக ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் உள்ள ஹங்கேரியா சிட்டி சென்டருக்கு காலை 10 மணி முதல் நண்பகலுக்குள் வரும்படியும், அனைத்து இந்தியர்களும் அவசர அடிப்படையில், கூகுள் விண்ணப்பத்தில் தங்களுடைய விவரங்களை நிரப்பும்படியும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது. மேலும், பாதுகாப்புடன் இருங்கள் என்றும் தைரியமுடன் இருங்கள் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in