`ரஷ்யா நடத்துவது போர் அல்ல, பயங்கரவாதம்'

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி குற்றச்சாட்டு
`ரஷ்யா நடத்துவது போர் அல்ல, பயங்கரவாதம்'
உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி

ரஷ்யா தற்போது செய்து வருவது போர் அல்ல, பயங்கரவாதம் என்றும் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றும் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 26-வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். போரை நிறுத்தக் கோரி உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தொடர் ராணுவ நடவடிக்கையை எடுத்து வருகிறார். இந்நிலையில், பாதுகாப்பு கருதி மரியுபோல் நகரில் உள்ள ஓவிய பள்ளியில் 400க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். இந்த பள்ளி மீது ரஷ்ய ராணுவம் குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என உக்ரைன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பேச்சுவார்த்தைக்கு வரும்படி ரஷ்ய அதிபர் புதினுக்கு உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லையென்றால் 3-ம் உலக போர் நிகழும் என்றும் ரஷ்யா தற்போது செய்து வருவது போர் அல்ல, பயங்கரவாதம் என்றும் ஸெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.