`ரஷ்யா அழித்து வருகிறது; உலக நாடுகள் ஏதாவது செய்யுங்கள்'

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி உருக்கம்
`ரஷ்யா அழித்து வருகிறது; உலக நாடுகள் ஏதாவது செய்யுங்கள்'

"வான்வெளி தாக்குதல் மூலம் உக்ரனை ரஷ்யா அழித்து வருகிறது என்றும் உலக நாடுகள் ஏதாவது செய்ய வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது கடந்த 11 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா பலமுனை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வான்வெளி ஏவுகணை தாக்குதல் மூலம் வினிஸ்டா விமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது. வான்வெளி தாக்குதல் மூலம் உக்ரனை ரஷ்யா அழித்து வருகிறது. உலக நாடுகள் ஏதாவது செய்ய வேண்டும். குறைந்தபட்சம் உக்ரைன் மீதான வான்வெளியை அனைத்து நாடுகளும் மூட வேண்டும் அல்லது போரிட எங்களுக்கு போர் விமானத்தை கொடுக்க வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவில் செய்தியாளர்களை சந்தித்த டிமிட்ரோ குலேபா, இந்தியாவின் விவசாய பொருட்கள் இறக்குமதியில் உக்ரைன் முக்கிய பங்கு வகிப்பதாகவும், ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்தால் வேளாண் பணிகள் பாதிக்கப்படும் என்றும் உலகளாவிய மற்றும் இந்திய உணவின் பாதுகாப்பின் அடிப்படையிலாவது ரஷ்யாவின் போரை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

உக்ரைன் மீதான தாக்குதல் நிறுத்தும்படி இந்தியாவில் உள்ள தூதரகங்களுக்கு இந்தியர்கள் அழுத்தம் குடுக்க வேண்டும் என வலியுறுத்திய டிமிட்ரோ குலேபா, இந்தியாவில் நட்புறவில் உள்ள நாடுகள் ரஷ்யாவின் போரை நிறுத்தும்படி பிரதமர் மோடியிடம் முறையிட வேண்டும் எனவும் ரஷ்யாவுடன் நட்புறவில் உள்ள சீனா உள்ளிட்ட நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வர உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கல்வி பயில வரும் மாணவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக உக்ரைன் ஒரு நல்ல வரவேற்பு இல்லமாக இருந்து வந்துள்ளது என்று தெரிவித்த அவர், ஆனால் உக்ரைன் படைகள் வெளிநாட்டு மாணவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக பொய்களை கூறி ரஷ்யா அனுதாபம் தேடுவதாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in