உக்ரைனின் 5 நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற வாய்ப்பு!

மனிதாபிமான அடிப்படையிலான வழித்தடத்தை அமல்படுத்த அனுமதியளித்த ரஷ்யா
உக்ரைனின் 5 நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற வாய்ப்பு!

உக்ரைனின் கீவ், செர்னிஹிவ், சுமி, கார்கிவ், மரியுபோல் நகரங்களில் மனிதாபிமான அடிப்படையிலான வழித்தடத்தை அமல்படுத்த அனுமதியளித்திருக்கிறது ரஷ்யா.

போர் நடக்கும் பகுதிகளில் மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை வழங்குவது, போர் நடக்கும் இடத்திலிருந்து மக்கள் வெளியேற வழிவகுப்பது போன்றவற்றை உள்ளடக்கிய நடவடிக்கை மனிதாபிமான அடிப்படையிலான வழித்தடம் என அழைக்கப்படுகிறது.

இதுகுறித்து ரஷ்யப் பாதுகாப்புத் துறை இன்று அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக, இன்டெர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தற்போது இந்த நகரங்களில் சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருப்பதால் பொதுமக்கள் பத்திரமாக வெளியேற வழி கிடைத்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in