இம்ரான் கானைப் படுகொலை செய்ய சதியா? - பாகிஸ்தானில் பதற்றம்

இம்ரான் கானைப் படுகொலை செய்ய சதியா? - பாகிஸ்தானில் பதற்றம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில், இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.

இம்ரான் கான் குறித்த வதந்திகளால் ஏற்கெனவே இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளன என்றும் இஸ்லாமாபாத் காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான இஸ்லாமாபாத் காவல் துறையின் ட்வீட்டில், ‘இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியான பானி காலாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் வருகை குறித்து உறுதியான செய்தி எதுவும் வரவில்லை. சட்டப்படி இம்ரான் கானுக்கு முழுமையான பாதுகாப்பை இஸ்லாமாபாத் காவல் துறை வழங்கும். அவரது பாதுகாப்புக் குழுக்களிடமிருந்தும் பரஸ்பர ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்’ என்று கூறியுள்ளது.

இதற்கிடையே, இம்ரான் கானுக்கு ஏதேனும் நேர்ந்தால், அந்தச் செயல் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலாகக் கருதப்படும். இதற்கான பதில் ஆக்ரோஷமாக இருக்கும் என்று இம்ரான் கானின் மருமகன் ஹசன் நியாசி கூறியிருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததால், பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தனது பதவியை இழந்தார். தனது பதவி பறிபோனதில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளின் சதி இருப்பதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தச் சூழலில் இம்ரான் கானைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in