நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த ஆளும் கட்சி எம்பி... அம்பலப்படுத்திய பெண் எம்பி

நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த ஆளும் கட்சி எம்பி... அம்பலப்படுத்திய பெண் எம்பி

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவர் தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார். பெண் எம்பி ஒருவர் இதனை அம்பலப்படுத்தியதால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளாா் ஆளும் கட்சி எம்பி.

இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பி நீல் பாரிஷ். இவர், கடந்த 2010ம் ஆண்டு முதல் எம்பியாக இருந்து வந்துள்ளார். அண்மையில் இவர் நாடாளுமன்ற கீழவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அப்போது, தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார்.

இதனை சக பெண் எம்பி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தனது அருகில் இருந்து கொண்டே நீல் பாரிஷ் ஆபாச படம் பார்த்ததாக அந்த பெண் எம்பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்தே, இந்த விவகாரம் வெளியே தெரியவந்தது. இதனை ஒப்புக்கொண்டுள்ள நீல் பாரிஷுக்கு நெருக்கடி முற்றியது. இதையடுத்து, தனது எம்பி பதவியை நீல் பாரிஷ் ராஜினாமா செய்துள்ளார். ஆபாச படம் பார்த்து எம்பி ஒருவர் தனது பதவியை இழந்தது அந்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in