சவுதி அரேபியா கால்பந்து வீரர்கள் காட்டில் மழை; ஒவ்வொருவருக்கும் ரூ.10 கோடி மதிப்பிலான கார் பரிசு: இளவரசர் அறிவிப்பு

சவுதி அரேபியா கால்பந்து வீரர்கள் காட்டில் மழை; ஒவ்வொருவருக்கும் ரூ.10 கோடி மதிப்பிலான கார் பரிசு:  இளவரசர்  அறிவிப்பு

அர்ஜெண்டினா அணியை கால்பந்து போட்டியில் வீழ்த்திய சவுதி அரேபியா அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.10 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய் காரை பரிசாக இளவரசர் முகமது பின் சலாம் அல் சவுத் அறிவித்துள்ளார்.

கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நவ. 22-ம் தேதி அர்ஜெண்டினா அணியை சவுதி அணி 2-1 என்ற கணக்கில் கோல் அடித்து வென்றது. இந்த வெற்றியை சவுதி அரேபிய மக்கள் திருவிழா போல கொண்டாடினர். இந்தக் கொண்டாட்டத்தில் அரசும் பங்கேற்கும் விதமாக நவ.23-ம் தேதியை தேசிய விடுமுறை நாளாக சவுதி அரேபியா மன்னர் சல்மான் அறிவித்தார்.

தற்போது இந்த வெற்றி கொண்டாட்டத்தை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் சவுதி அரேபியாவின் இளவரர் முகமது பின் சலாம் அல் சவுத் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அர்ஜெண்டினா அணியை வீழ்த்திய சவுதி அரேபியா அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் (Phantom) கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

முகமது பின் சலாம் அல் சவுத்
முகமது பின் சலாம் அல் சவுத்

இந்தியாவில் இந்த காரின் விலை 8.99 கோடி முதல் 10.48 கோடியாகும். உலகக்கோப்பை முடிந்து நாடு திரும்பும் போது அவர்கள் இந்த காரைப் பெற்றுக் கொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு சவுதி அரேபியா கால்பந்து வீரர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in