சோகம்...அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி காலமானார்!

ஜிம்மி கார்ட்டர், ரோஸ்லின் கார்ட்டர்
ஜிம்மி கார்ட்டர், ரோஸ்லின் கார்ட்டர்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் மனைவி ரோஸ்லின் கார்ட்டர் காலமானார். அவருக்கு வயது 96. வயது மூப்பின் காரணமான ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

1977 முதல் 1981-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ஜிம்மி கார்ட்டர். இவரது மனைவி ரோஸ்லின் கார்ட்டர் (96). இவர் வயது மூப்பின் காரணமாக டிமென்ஷியா என்னும் நோயால் பாதிக்கப்பட்டு ஜார்ஜியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

ரோஸ்லின் கார்ட்டர்
ரோஸ்லின் கார்ட்டர்

தனது மனைவியின் இறப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கார்ட்டர், தனது வாழ்க்கையின் சரிபாதியாக விளங்கியவர் என கூறியுள்ளார்.

மேலும், தனது ஆலோசகராகவும், துவண்டுபோகும் சமயங்களின் ஊக்கப்படுத்தி வெற்றிக்கு உதவியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த உலகில் தன்னைக் காதலிக்கவும், தனக்கான ஆதரவாகவும் எப்போதும் இருந்தவர் ரோஸ்லின் என்றும் அந்த அறிக்கையில் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

அதிபராக ஜிம்மி இருந்த சமயம், ஆட்சி விவகாரங்களில் ரோஸ்லின் தலையிட்டதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, நான் அரசை நடத்தவில்லை என வெளிப்படையாக அறிவிக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். மேலும் ஜிம்மியை விட ரோஸ்லினுக்கு அரசியல் அனுபவம் அதிகம் என பலர் சொல்வதுண்டு.

அதிபருடன் ஒரு திட்டம் குறித்து விவாதிப்பதற்கு முன்னர் அரசு அதிகாரிகள் ரோஸ்லினுடன்தான் முதலில் விவாதித்து அவருடைய ஆதரவை பெறுமளவுக்கு செல்வாக்கு இருந்ததாக கூறப்படுகிறது. ஜிம்மியும், ரோஸ்லினும் கடந்த 77 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

ஜிம்மி கார்ட்டர், ரோஸ்லின் கார்ட்டர்
ஜிம்மி கார்ட்டர், ரோஸ்லின் கார்ட்டர்

ரோஸ்லின் 1927-ம் ஆண்டு பிறந்தார். 4 குழந்தைகளில் ரோஸ்லின்தான் மூத்தவர். அவர் சிறிய வயதாக இருந்த போதே அவருடைய தந்தை மறைந்ததால் தாய் வேலைக்கு போகும் நிலை ஏற்பட்டது. எனவே, தாய் வீடு திரும்பும் வரை அவருடைய சகோதர, சகோதரிகளை பொறுப்பாக பார்த்துக் கொண்டவர் ரோஸ்லின். அத்துடன் இவர் அமெரிக்க வெள்ளை மாளிகையின் முக்கிய மனநல ஆலோசகராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஒய்யாரமாய் வலம் வரும் பிரபல நடிகை

உஷார்... சிக்கன் பிரியாணியால் சுயநினைவை இழந்த 3 பேர்!

மணி ரத்னத்தால வாழ்க்கையே போச்சு.. நாசம் பண்ணிட்டார்... பொதுவெளியில் புலம்பிய பிரபலம்!

கொதிக்கும் சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

புகார் கொடுக்க வந்த சிறுமியை சீரழித்த உதவி ஆய்வாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in