அதிர்ச்சி… 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ரோல்ஸ் ராய்ஸ்!

அதிர்ச்சி… 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ரோல்ஸ் ராய்ஸ்!

உலகின் முன்னணி ஆடம்பர கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் தனது 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது.

உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்களில் லே ஆஃப் எனப்படும் பணி நீக்கம் தொடர்கிறது. பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.

அந்த வரிசையில் உலகின் முன்னணி ஆடம்பர கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் இணைந்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இங்கிலாந்தில் 42,000 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் கீழ் போர் விமானங்களுக்கான ஜெட் இன்ஜின்கள் தயாரிப்பு, பயணிகள் விமானங்களுக்கான ஜெட் இன்ஜின்கள் தயாரிப்பு மற்றும் படகுகளுக்கான தயாரிப்பு ஆகிய மூன்று முக்கிய பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக எர்ஜின் பில்ஜிக் என்பவர் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். இந்நிறுவனம் சந்தையில் பின்னடைவை சந்திப்பதை தடுக்க பெரிய மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளதாக அவர் கூறினார்.

அதன் ஒரு பகுதியாக தங்கள் நிறுவனத்தில் இருந்து 2,500 பணியாளர்களை நீக்கம் செய்ய உள்ளது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். உற்பத்தி சாரா தொழிலாளர்களே நீக்கப்பட உள்ளனர். இதனால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in