பிரிட்டன் பிரதமர் ரேஸில் தொடர்ந்து முந்தும் ரிஷி சுனக்: 3-வது சுற்றிலும் முதல் இடம்!

பிரிட்டன் பிரதமர் ரேஸில் தொடர்ந்து முந்தும் ரிஷி சுனக்: 3-வது சுற்றிலும் முதல் இடம்!

பிரிட்டனின் அடுத்த பிரதமருக்கான தேர்தலில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மூன்றாவது சுற்றிலும் முதல் இடத்தில் உள்ளார். இந்த சுற்றில் பிரதமர் தேர்தல் போட்டியாளர்களின் எண்ணிக்கை 4 ஆக குறைந்துள்ளது.

பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான கன்சர்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பிக்கள் பங்கேற்கும் தேர்தல் நடந்து வருகிறது. இதன்படி நேற்று நடந்த 3 வது சுற்று தேர்தலில் 5 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

நேற்று நடந்த இந்த வாக்கெடுப்பில் ரிஷி சுனக் 115 வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென்னி மோர்டான்ட் 82 வாக்குகளையும், லிஸ் ட்ரஸ் 71 வாக்குகளையும், கெமி படேனோச் 58 வாக்குகளையும் பெற்றார். இந்த சுற்று தேர்தலில் 31 வாக்குகளை மட்டுமே பெற்ற டாம் துகென்தாட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

இன்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பிக்கள் பங்கேற்கும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது, இதில் குறைவான வாக்குகளை பெறும் வேட்பாளர் போட்டியிலிருந்து நீக்கப்படுவார். இவ்வாறு ஒவ்வொருவராக நீக்கப்பட்டு கடைசியில் இருவர் மட்டும் களத்தில் இருப்பார்கள். அதனைத் தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சியின் 200,000 உறுப்பினர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்வார்கள். இதன் மூலமாக கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் செப்டம்பர் 5 -ம் தேதி புதிய பிரதமராக அறிவிக்கப்படுவார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in