தனிமையில் வசித்த 2 பெண்கள் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்பு: கொலையா என விசாரணை

எரிந்த நிலையில் 2 பெண்கள் சடலங்கள் மீட்பு
எரிந்த நிலையில் 2 பெண்கள் சடலங்கள் மீட்புதனிமையில் வசித்த 2 பெண்கள் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்பு: கொலையா என விசாரணை

இலங்கையில் தனியாக வசித்து வந்த இரண்டு பெண்கள் தீயில் எரிந்த நிலையில் இன்று சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் எரித்துக் கொலை செய்யப்பட்டனரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இலங்கையில் உள்ள யாழ் நகரில் உள்ள ஊர்காவல் துறை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள வீட்டில் இருந்து இன்று மாலை புகை வருவதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த வீட்டிற்கு போலீஸார் சென்று பார்த்த போது, இரண்டு பெண்கள் தீயில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தனர். அவர்களது உடல்களை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது, 65 வயதிற்கு மேற்பட்ட அந்த பெண்கள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். அவர்கள் சடலங்களுக்கு அருகில் தீப்பெட்டி ஒன்றும் கிடந்தது. அவர்களை யாராவது எரித்துக் கொலை செய்தார்களா அல்லது அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா என ஊர் காவல்துறை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in