இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே!

பழைய பிரதமர் ட்விட்டரில் வாழ்த்து
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே!

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக, அரசியல் தாக்கம் காரணமாக திங்களன்று முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரதமர் பதவிக்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரசிங்கே இன்று பதவியேற்றார்.

அவருக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்," இந்த இக்கட்டான காலகட்டத்தில் நீங்கள் உங்கள் பணியை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.