நெருக்கடி கொடுத்த மக்கள்: பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்ச

நெருக்கடி கொடுத்த மக்கள்: பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்ச

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராஜபக்ச.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலக கோரி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இருவரும் பதவி விலக மறுப்பு தெரிவித்து வந்தனர். ஒரு மாதமாக நீடித்து வரும் போராட்டங்களை ஒடுக்க நாடு முழுவதும் மீண்டும் அவசர நிலை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாக உறுதியான எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது.

இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியுள்ளார். தனது விலகல் கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மகிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் அமைச்சரவை கலைக்கப்பட்டு அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in