காட்டு பங்களாவில் பதுங்கியிருக்கும் ராஜபக்ச குடும்பம்!: வெளிவந்த புதுத்தகவல்

காட்டு பங்களாவில் பதுங்கியிருக்கும் ராஜபக்ச குடும்பம்!: வெளிவந்த புதுத்தகவல்

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை பகுதியில் உள்ள காட்டு பங்களாவில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் வன்முறை தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். மருத்துவச் சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை பகுதியில் உள்ள காட்டு பங்களாவில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருகோணமலை கடற்படைத் தளத்தின் ஏரியா கமாண்டர் பகுதியில் உள்ள கப்பல்துறை தளத்தில் உள்ள 'பில்லோ ஹவுஸ்' எனப்படும் காட்டு பங்களாவில் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கியிருப்பதாக தெரிகிறது.

கடலுக்கும், கடற்படை தளத்தின் நுழைவாயிலுக்கும் அருகில் இந்த காட்டு பங்களா அமைந்துள்ளது. இதனைச் சுற்றிய பல ரகசிய இடங்களும் உள்ளன. 'பில்லோ ஹவுஸ்' பாதுகாப்பான இடம் என்பதால் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

திரிகோணமலையில் இருந்து ஹெலிகாப்டரில் கட்டுநாயக்காவிற்கு வருவதாக மக்களைத் திசை திருப்பி விட்டு மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் காட்டு பங்களாவிற்கு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in