ராஜபக்ச குடும்பத்தினர் தனி ஹெலிகாப்டரில் தப்பியோட்டம்!

ராஜபக்ச குடும்பத்தினர் தனி ஹெலிகாப்டரில் தப்பியோட்டம்!

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மருமகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ராணுவ ஹெலிகாப்டரில் தப்பித்துச் செல்வது போன்ற காட்சிகள் வைரலாகி வருகிறது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பத்தினர் எடுத்த தவறான முடிவுகள் தான் காரணம் என எதிர்க் கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோத்தபய ராஜபக்சவும், மகிந்த ராஜபக்சவும் பதவி விலகக் கோரி ஒரு மாதமாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச நேற்று ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், அரசுக்கு எதிராக அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டத்தில் மகிந்த ராஜபக்ச வன்முறையை தூண்டியதாக இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை நடத்தியதற்காக ராஜபக்சவை கைது செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகிய நிலையில், அவரது மகன் யோசிதா வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார்.

இந்த நிலையில், மகிந்த ராஜபக்சவின் இன்னொரு மகனும், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சருமான நமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச மற்றும் அவரது பெற்றோர் ராணுவ ஹெலிகாப்டரில் தப்பித்துச் செல்வது போன்ற காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in