திரிகோணமலையில் இருந்து சோபர் தீவுக்கு தப்பிய ராஜபக்ச குடும்பம்!: வெளியான அதிர்ச்சி தகவல்

திரிகோணமலையில் இருந்து சோபர் தீவுக்கு தப்பிய ராஜபக்ச குடும்பம்!: வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் வெடித்துள்ள மக்கள் போராட்டத்தில் இருந்து தப்பி திருகோணமலைக்கு சென்ற முன்னாள் பிரதமர் ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் ஜெட் படகு மூலம் சோபர் தீவுக்கு தப்பியோடி விட்டதாக பரபரப்ப ஆடியோ வெளியாகியுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கும், தங்கள் படும் இன்னலுக்கும் மகிந்த ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச குடும்பத்தினர் தான் காரணம் என மக்கள் கடந்த ஒரு மாதமாக போராடி வருகின்றனர். அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் திங்களன்று கொழும்பில் ராஜபக்ச ஆதரவாளர்கள் பொதுமக்களைத் தாக்கினர். இதனால் வன்முறை வெடித்தது. இதன் காரணமாக மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் வீடு மற்றும் அவரது கட்சி அலுவலகம், அவரது கட்சி நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் பொதுமக்களால் தீவைத்து எரிக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று காலை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் தமிழர்கள் அதிகம் வசிக்கும் திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாமிற்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து அங்கு பொதுமக்கள் குவிந்து சுமார் 4 மணி நேரமாக போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது மனைவி, மகன் உள்ளிட்டோர் திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து ஜெட் படகின் மூலம் சோபர் தீவிக்கு தப்பி ஓடி விட்டதாகஒரு ஆடியோ செய்தி வெளியாகியுள்ளது.

அதில், மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் சோபர் தீவில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆடியோவில் பேசிய நபர் யார் என்பது குறித்தும், அவர் கூறிய தகவல்களின் உண்மை தன்மை குறித்தும் இதுவரை எந்த விவரமும் தெரியவில்லை. இந்த ஆடியோ செய்தி இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் ஆளுங்கட்சி எம்.பிக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in