ரஷ்ய அதிபர் புதினுக்கு மாரடைப்பா? - வெளியான அதிர்ச்சி தகவல்!

புதின்
புதின்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக டெலிகிராம் செயலி வழியாக சில தகவல்கள் பரவியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபர் மாளிகையில் பணியில் இருந்த புதின் நெஞ்சுவலி காரணமாக சரிந்து விழுந்ததாகவும், அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக அவரை மீட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அதிபர் மாளிகை விரைந்த மருத்துவர்கள், அவரது இதய துடிப்பை எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து மீட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் அதிபர் மாளிகையில் இருந்து இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை என்றும், அவரைப்போன்ற தோற்றம் கொண்ட ஒருவரே பொது வெளியில் தோன்றி வருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

71 வயதாகும் ரஷ்ய அதிபர் புதின் குறித்து பல்வேறு தகவல்கள் இதுபோன்று முன்னரும் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in