உக்ரைன் போருக்கு நடுவே ரகசியக் காதலியுடன் விழா கொண்டாடிய ரஷ்ய அதிபர்!
ரஷ்ய அதிபர் புதின்

உக்ரைன் போருக்கு நடுவே ரகசியக் காதலியுடன் விழா கொண்டாடிய ரஷ்ய அதிபர்!

உக்ரைன் மீதான போர் தீவிரமடைந்துவரும் சூழலில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் ரகசியக் காதலி எனச் சொல்லப்படும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவாவைக் கெளரவிக்கும் ஜிம்னாஸ்டிக் விழாவை அவர் நடத்தியுள்ளது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

அலினா கபேவாவைக் கௌரவிக்கும் வகையில் ரஷ்யா 'அலினா விழா' என்ற விழாவை நடத்தியது, புதின் கலந்துகொண்ட இவ்விழா கடந்த மாதம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தைக் குறிக்கும் வகையில் ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சி சேனல் ஜூன் 1-ம் தேதி இந்த விழாவினை ஒளிபரப்பியது. இந்த விழாவில் இளம் குழந்தைகள் மற்றும் ஜிம்னாஸ்டிக் வீரர், வீராங்கனைகள் மேடையில் சாகசங்கள் செய்து நடனமாடும் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின.

அலினா கபேவா
அலினா கபேவா

இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக இருந்த அலினா கபேவா ஐரோப்பிய போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்றபோது ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் ரிதமிக் ஜிம்னாஸ்டிக் பிரிவில் தங்கப் பதக்கத்தை அலினா கபேவா வென்றார். அதன்பின்னர் அலினா கபேவா 'ரஷ்யாவின் மிகவும் நெகிழ்வான பெண்' என்று பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in