சீனாவிற்குச் சென்ற புதுக்கோட்டை மருத்துவ மாணவர் மரணம்: உடலை மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை

சீனாவிற்குச் சென்ற புதுக்கோட்டை மருத்துவ மாணவர் மரணம்: உடலை மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை

புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவ பயிற்சி மாணவர் சீன நாட்டில் உடல்நலமின்மையால் உயிர் இழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவந்து அடக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்தவர் சையது அபுல்ஹாசன். இவரது மகன் ஷேக் அப்துல்லா. இவர் கடந்த 2017-2018-ம் ஆண்டில் சீனாவில் மருத்துவம் பயிலஙச சென்றிருந்தார். கரோனா முதல் அலையிலேயே அவர் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து இந்தியா வந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்தார். தொடர்ந்து அவர் மீண்டும் சீனாவில் பயிலச் சென்றார். இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் இருந்தே இணைய வழியில் மருத்துவக் கல்வி பயின்றார்.

தொடர்ந்து கடந்த 11-ம் தேதி மருத்துவக் கல்லூரி முடித்த பின்பு பங்கேற்கும் பயிற்சி வகுப்பிற்காக சீனாவிற்கு ஷேக் அப்துல்லா சென்றார். இந்நிலையில் அங்கு ஷேக் அப்துல்லாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ஷேக் அப்துல்லாவிற்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்தார். அதேநேரம் ஷேக் அப்துல்லா மருத்துவமனையில் இருந்த நேரத்திலேயே, சீனாவில் கரோனா வைரசும் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் ஷேக் அப்துல்லா குடும்பத்தினரால் சீனாவிற்கும் செல்ல இயலவில்லை. இந்நிலையில் ஷேக் அப்துல்லா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே, அவரது உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in