பசில் ராஜபக்ச வீட்டிற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

பற்றி எரியும் வீடு.
பற்றி எரியும் வீடு.

இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு சொந்தமான வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

எரிபொருள், மருந்துப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்ய அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லை. இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்சவும், கோத்தபய ராஜபக்ச ஆகியோரின் குடும்பம் தான் காரணம் என மக்கள் கடந்த ஒரு மாதமாக போராடி வருகின்றனர்.

ஆத்திரத்துடன் திரண்ட போராட்டக்காரர்கள்.
ஆத்திரத்துடன் திரண்ட போராட்டக்காரர்கள்.

இவர்கள் இவரும் பதவி விலக வேண்டும் என்று மக்கள் நடத்திவந்த போராட்டத்தின் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், கொழும்பு அலரி மாளிகைக்கு எதிரில் மற்றும் காலிமுகத் திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றும் இன்றும் பொதுமக்கள் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்துவதுடன் தீ வைத்து வருகின்றனர். இதன் காரணமாக ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பியோடும் வேலையில் இறங்கியுள்ளனர்.

வீட்டிற்குள் நுழையும் போராட்டக்காரர்கள்.
வீட்டிற்குள் நுழையும் போராட்டக்காரர்கள்.

இந்த நிலையில் கம்பஹா மாவட்டம் மல்வானவில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான எனக்கூறப்படும் மல்வான ரெசிடென்ஸ் வீட்டின் மீது இன்று பிற்பகல் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதன் பின் வீட்டிற்குள் புகுந்து தீ வைத்தாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in