ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி: ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேற்று நள்ளிரவு ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார். ஜி7 அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்வதற்காக ஜெர்மனி சென்றுள்ளார் பிரதமர் மோடி.

ஜி7 அமைப்பில் இருக்கும் நாடுகளின் உச்சி மாநாடு ஜெர்மனியில் இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், நேற்று நள்ளிரவு ஜெர்மனிக்கு சென்றார். தெற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாலில் பகுதியில் நடக்கும் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு ஜெர்மனி அதிபர் அழைத்ததன் பேரிலேயே பிரதமர் மோடி சென்றுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த மாதம் இந்தியா-ஜெர்மனிக்கு இடையே நடைபெற்ற ஆக்கப்பூர்வ ஆலோசனைக்குப் பிறகு ஜெர்மன் பிரதமர் ஸ்கால்ஸை சந்திப்பது மகிழ்ச்சியளிப்பதாகும். இந்த மாநாட்டில் பல்வேறு அமர்வுகளின்போது சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவுப் பாதுகாப்பு, பாலின சமத்துவம், சுகாதாரம், தீவிரவாத எதிர்ப்பு, ஜனநாயம் போன்ற முக்கியக் கருத்துகளை எடுத்துவைக்க உள்ளேன். ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ள தலைவர்களை சந்தித்துப் பேசுவதிலும் ஆர்வமாக உள்ளேன். ஜரோப்பா முழுவதும் வசிக்கும் இந்திய வம்சாவழியினரையும் சந்திக்க உள்ளேன்.

அங்கிருந்து 28-ம் தேதி அபுதாபி சென்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மன்னரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஷேக் கலிபா பின் செய்யது அல் நஹ்யான் மறைவையொட்டி, தற்போதைய மன்னரும், அந்நாட்டு அதிபருமான ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்கின்றேன். ”என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in