நடுவானில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி: விமானம் தரையிறங்கிய போது நடந்த அதிர்ச்சி சம்பவம்

நடுவானில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி: விமானம் தரையிறங்கிய போது நடந்த அதிர்ச்சி சம்பவம்

நடுவானில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி எடுத்ததால் விமானம் தரையிறக்கப்பட்டபோது அதில் இருந்து 14 பயணிகள் தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொரக்கோவின் காசாபிளாங்காவில் இருந்து இஸ்தான்புல்லுக்கு பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமானம் 228 பயணிகளுடன் நேற்று சென்றது. அந்த விமானம் ஸ்பெயின் பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த பெண் ஒருவர், திடீரென பிரசவ வலி எடுப்பதாக கதறினார். இதையடுத்து விமானம் உடனடியாக பார்சிலோனா நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அப்போது திடீரென விமானத்திலிருந்து 27 பயணிகள் இறங்கி தப்பியோடினர். இதைக்கண்ட விமான நிலைய போலீஸார் அவர்களை விரட்டினர். அதில் 13 பேர் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து பிரசவ வலி வந்தது போல் கதறிய பெண்ணை, உடனடியாக மருத்துவர்கள் சோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. ஆனால், அவருக்கு பிரசவ வலி ஏற்படவில்லை எனத்தெரிய வந்தது. 27 பேரை தப்பிக்க வைப்பதற்காக அந்த பெண் பிரசவ வலி ஏற்பட்டது போல நடித்தது தெரிய வந்தது. பிடிபட்டவர்களில் ஐந்து பேர் மீண்டும் விமானத்தில் ஏறி இஸ்தான்புல்லுக்குச் செல்ல ஒப்புக்கொண்டனர். மற்ற எட்டு பேரும் மற்றொரு பெகாசஸ் விமானத்தில் அனுப்பப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. எதற்காக அவர்கள் விமானத்தில் இருந்து தப்பினார்கள் என்பது குறித்த விவரத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in